வந்தவர்கெல்லாம் இன்றும் வயிறார சோறு போடும் வள்ளல் வள்ளலார்..!ஜோதியே வடிவாமாக காட்சி..!! இந்த நாளில்..!

தைப்பூசம் வெகு சிறப்பாக  தை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.தை மாதத்தில்  பூச நட்சத்திரமும் முழுநிலா நாளும் கூடி வருகின்ற நல்ல நாளில் அழகன் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.

தைப்பூச சிறப்புகள் பல இருந்தாலும் அதில் சிறப்பு பெற்றது வடலூரில் நடைபெறுகின்ற தைப்பூச ஜோதி தரிசனம் விழா  ஒரு முக்கிய விழாவாகும்.இவ்விழாவானது வடலூரில் தைப்பூசம் வெகு விமர்சையாக  வருடா வருடம் கொண்டாடப்பட்டு படுகிறது.

இன்றும் வந்தவர்கெல்லாம் இன்றும் வயிறார சோறு போடும் வள்ளலாகவே  வள்ளலார் உள்ளார். தணிப்பெருங்கருணை  அருட்பெருஞ்சோதி வடிவாக காட்சி தருகிறார்.

அதன் படி இந்த ஆண்டுக்கான  தைப்பூச ஜோதி தரிசன வழிபாடானது  வருகின்ற 21 மற்றும்  22 தேதிகளில் நடைபெறகிறது.21 தேதியான திங்கட்கிழமை அன்று  காலை 5.30, 10, மதியம் 1 மணி , இரவு 7,10 மணிக்கு மறைக்கப்பட்டு உள்ள திரையானது  விலக்கப்பட்டு வள்ளாலர் ஜோதி தரிசனம் தருகிறார் மற்றும் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனமானது  சிறப்பாக நடைபெறும்.

Image result for வள்ளலார் ஜோதி

வள்ளலார் இராமலிங்க அடிகளார் இன்றும் உருவமாக நமது கண்களுக்கு எல்லாம்  தோன்றாமல் அருவமாக எங்கும் நிறைந்து அருட்பெருஞ்சோதியாகவே விளங்கிக் அருளிகிறார்.

இதில் அதியசயம் என்னவென்றால் வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் ஏற்றிய அகல் தீபமானது  இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகின்றது .

இது அறைக்குள் உள்ள இருக்கும் ஆறே முக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொளிக்கும் அதியச நிகழ்வு நடைபெறுகிறது. அந்தத் தீபத்தின் எதிரொலியே  ஒளி என்றும்  அந்தக் கண்ணாடி வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

Image result for வள்ளலார் ஜோதி

ஜோதி தரிசன காட்சியானது ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியை நம்மால் காண இயலும். அந்த திரைகள் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் அடங்கிய  ஏழு வண்ணத் திரைகள் என்பது நினைவில் கொள்ள வேண்டும். ஒளிக்காட்சிக்கு  முன்பு இந்த ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்பட்டு  திரைகள் விலகியதுமே அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் கண்டதுமே  நம் உள்ளே ஒரு கண்டிப்பாக அதிர்வு ஏற்படும்.

Image result for வள்ளலார்

இந்த நாளில் அவர்  சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து நாம் ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் நடைபெறும் பூச நாட்களில் இங்கு  சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும் தைப்பூச விழாவின் மூன்றாவது நாள் இந்த அறையை பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

author avatar
kavitha

Leave a Comment