தல அஜித்தின் ‘வலிமை’ பட ஷூட்டிங் அப்டேட்! வில்லன் நடிகர் யார் தெரியுமா?!

  • தல அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை H.வினோத் இயக்க உள்ளார்.
  • இப்படத்தின் ஷூட்டிங் ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது.

தல அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை H.வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படதில் அஜித்தை தவிர வேறு யார் நடிக்கிறார் என தகவல் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இப்பட ஷூட்டிங் தற்போது ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வைத்து நடைபெற உள்ளது.  முதலில் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் தான் படமாக்கப்பட உள்ளதாம். இதில் பல ரிஸ்க்கான சண்டைகாட்சிகள் இடம் பெற உள்ளதாம்.

இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக போஸ் வெங்கட் ( தீரன் , கவண் ஆகிய படங்களில் நடித்தவர் ) நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ஹீரோயின் லிஸ்டில் ப்ரணிதி சோப்ரா, இலியானா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் உள்ளனர். விரைவில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.