காக்கைகளை தேசிய பறவையாக்க முடியுமா?அமித்ஷா ட்வீட் குறித்து வைகைச்செல்வன் கருத்து

காக்கைகளை தேசிய பறவையாக்க முடியுமா ? என்று அமித்ஷா ட்வீட் குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று இந்தி தினம் கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அமித்ஷா ட்வீட் குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால் நாட்டில் மயில்களை விட காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காக்கைகளை தேசிய பறவையாக்க முடியுமா? என்று அண்ணா அன்றே கூறியிருந்தார்.எனவே இது அமித் ஷாவின்   எண்ணத்தை தெரிவித்து இருக்கலாம்.இந்தியாவின் கலாச்சாரத்திற்கு இதற்கு சாத்தியக்கூறு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.