எனக்கு எண்டே கிடையாதுடா! மீண்டும் ஹீரோவாக மாஸ் என்ட்ரி கொடுக்கும் வைகை புயல்!

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில்  நடிக்கும்போது படத்தின்

By manikandan | Published: Aug 14, 2019 01:12 PM

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில்  நடிக்கும்போது படத்தின் நாயகன் வடிவேலுவுக்கும் அப்பட தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தரப்புடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தயாரிப்பு சங்கம் அவர் நடிக்க கூடாது என ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். இந்த பிரச்சனையின் போது இயக்குனர் சக்தி சிதம்பரம், பேய் மாமா எனும் படத்தை வடிவேலுவை கதாநாயகனாக வைத்து படமெடுப்பதாக அறிவித்தார். பின்னர் தயரிப்பு சங்கத்தில் பிரச்சனை காரணமாக அதே படத்தை யோகிபாபுவை வைத்து எடுக்க இயக்குனர் சக்தி சிதம்பரம் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தலைநகரம், மருதமலை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ், நடிகர் வடிவேலுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் கண்டிப்பாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc