ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும் -டொனால்ட் டிரம்ப்..!

ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும் -டொனால்ட் டிரம்ப்..!

நேற்று வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் இருக்க வேண்டும் என்று தனது நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டவுடன், அதை உடனடியாக அமெரிக்க மக்களுக்கு வழங்கும். ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான மில்லியன் மருந்துகள் கிடைக்கும், மேலும், அடுத்தாண்டு ஏப்ரல்-க்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதற்காக அமெரிக்காவின் "புத்திசாலித்தனமான" மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கடிகாரத்தைச் சுற்றி பணியாற்றி வருவதாகவும், மூன்று தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

“தடுப்பூசிகளைப் பொறுத்தவரை ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா நோயை முடிவுக்குக் கொண்டு வந்து வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தடுப்பூசி விரைவில் உருவாக்கப்பட வேண்டும்.

ஒரு வெற்றிகரமான தடுப்பூசி மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், இது கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், என்று ஜனாதிபதி கூறினார்.

Latest Posts

முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்
தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்...அதிர்ச்சி அதிகாரிகள்
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று