தை பொங்கலுக்கு விடுமுறையா ?இல்லையா ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

  • மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. 
  • ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்த விடுமுறை முடிந்த பின்பு  ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.இதனால் அன்று 9-12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம். பொங்கல் விடுமுறை ரத்து இல்லை .அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.