இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே – முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு

இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே – முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு

இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக  உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்.
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.ஆனால் தனது அரசுக்கு  பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தேவேந்திர பத்னாவிசு  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.பின்பு இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.இதனால் இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
ஏற்கனவே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே நிறுத்த முடிவு செய்தது.இதன்படி இன்று  உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்கிறார்.இன்று மாலை  சிவாஜி பார்க்கில் வைத்து நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்.
மேலும் உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முதலமைச்சர்கள் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜி  மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube