நடிகர் விஜய் கூறியது தான் சரி ! - திமுக இளைஞரணி செயலாளர்

இளைய தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவரவிருக்கும்

By vidhuson | Published: Sep 22, 2019 06:33 PM

இளைய தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவரவிருக்கும் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அட்லி, ஏ.ஆர். ரகுமான், யோகி பாபு, விஜய் போன்ற முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் குறித்து பேசினார். நடிகர் விஜய் பேசியது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெறிவித்துள்ளார். "விஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினருக்கு பிடிக்காது என்றும், விஜய் எந்தொரு  தவறானவற்றை கூறவில்லை என்றும் பேனர் கலாச்சாரத்தை நிச்சயம் ஒழிக்க வேண்டுமென்றும் தங்கள் தலைவரும் மூன்று வருடமாக கூறிவதாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
Step2: Place in ads Display sections

unicc