ரூ.10-க்கு சாதம், காய்கறி ,பருப்பு மற்றும் 2 சப்பாத்தி.! சொன்னதை நிறைவேற்றிய உத்தவ்.!

  • மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவசேனா கட்சி ரூ.10-க்கு மதிய உணவு  திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியது.
  • நேற்று குடியரசு தினத்தையொட்டி வாக்குறுதி அளித்து இருந்த ரூ.10-க்கு மதிய உணவு  திட்டத்தை சிவசேனா  அமல்படுத்தியது.

மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவசேனா கட்சி ரூ.10-க்கு மதிய உணவு  திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியது.இதைதொடர்ந்து நடைபெற்ற  சட்டசபை தேர்தலில் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.

நேற்று நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா கட்சி  குடியரசு தினத்தையொட்டி வாக்குறுதி அளித்து இருந்த ரூ.10-க்கு மதிய உணவு  திட்டத்தை நேற்று அமல்படுத்தியது.

Image result for Maharashtra launches Rs 10 lunch plate scheme on pilot basis

இந்த திட்டத்திற்கு “சிவ போஜன்” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைநகரங்களில் இந்த திட்டத்தை  மாநில மந்திரிகள் தொடங்கி வைத்தனர்.

ரூ.10-க்கு  சாதம், காய்கறி ,பருப்பு மற்றும் 2 சப்பாத்தி வழங்கப்படும்.இந்த உணவகம் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் .இந்த உணவகங்களில் தினமும் 500  பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தை செயல்படுத்த 3 மாதங்களுக்கு 6 கோடியே 40 லட்சம் செலவாகுமாம்.

author avatar
murugan