கேரட்டை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.!

Using carrots can increase hair growth.

இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது. இந்த முடி உதிர்வதற்காக  பல மருத்துவரிடம் சென்று அதிக அளவு செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அந்த சிகிக்சை  சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்,சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது நிலையில் நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை  எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். தேவையான பொருள்கள்: கேரட் ஒன்று அவகோடா -1/2 பழம் தேன் -2 டேபிள்ஸ்பூன் பயன்படுத்தும் முறை: மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.பின்னர்  உங்கள் உச்சந்தலையில் இந்த விழுதை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளுக்கும் இந்த விழுது உள்ளவாறு முழுவதுமாக தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும் இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் சரியான ரிசல்ட்டை தரும்.  

Hair loss is a major problem for young men and women today. Many people go to the doctor for treatment of this hair loss and spend large amounts of money. But while some people may agree with some of them, we can solve our hair problems by using carrots that we can use for cooking everyday. Now let's talk about how carrots can be used to enhance hair growth. Ingredients: Carrots Avocado-1/2 Fruit Honey-2 Tablespoon Method: Grind all the above ingredients together. Apply this paste to all the hairs on your scalp, soak it for half an hour, and then apply the herbal shampoo once a week.