திருச்சியில் நேற்று விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிதி!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று

By Fahad | Published: Apr 04 2020 11:44 PM

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காவலர் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை 3000 பேர் சாலை மறியல் செய்ததால்  ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.