சீனாவிற்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அவ்வப்போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி கடந்த ஜூலை முதல் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி சீனாவில் அதிகரிக்கப்பட்டது.

இதனால் இருநாடுகளும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்ததால் ஜனவரி மாதம் முதல் அமெரிக்க இறக்குமதி வரியை ஏற்றாமல் இருந்தது. தற்போது அந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்ததால் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில்,

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத வரியிலிருந்து 25 சதவீத வரியாக உயர்த்தப்படும் என கூறி மீண்டும் சீனாவிற்கு குடைச்சலை கொடுக்க ஆரம்பித்து விட்டார் ட்ரம்ப். இதனால் அதிர்ச்சியடைந்த சீன அதிகாரிகள் குழு நாளை மறுதினம் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் சுமுக முடிவுகள் எட்டப்படும் என நம்பப்படுகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment