அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் புற்றுநோயால் காலமானார்.!

பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க், தனது 87 வயதில் புற்றுநோயால் காலமானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புற்றுநோயால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அவர், இந்த ஆண்டு தொடக்கத்தில், கின்ஸ்பர்க் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் காலமானதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் முக்கிய பெண்ணியவாதியாகவும், தாராளவாதிகளுக்கு ஒரு தலைவராகவும் இருந்தார்.

நாட்டின் மிக உயர்நீதிமன்றத்தில் 27 ஆண்டுகள் பணியாற்றிய கின்ஸ்பர்க் உச்சநீதிமன்றத்தில் மிகப் பழமையான நீதிபதியாக இருந்துள்ளார். அவரது இழப்பு குறித்து தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாட்டின் வரலாற்றை நாம் இழந்துவிட்டோம். உச்சநீதிமன்றத்தில் நாங்கள் ஒரு நேசத்துக்குரிய சக ஊழியரை இழந்து, துக்கப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்