அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : உலக சுகாதார அமைப்பின் தலைவர்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : உலக சுகாதார அமைப்பின் தலைவர்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறியுள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால், அமெரிக்கா, அந்நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ், அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிதியை நிறுத்தி வைத்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா அளிக்கும் நிதி மற்ற நாடுகளுக்கும் மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்று குறைய தொடங்கியுள்ள நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தற்போது தான் இந்த வைரஸ் நோய் பரவ துவங்கியுள்ளது. இந்த தொற்றானது நீண்ட காலம் நீடித்திருக்கும் என்பதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெட்ராஸ் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube