இந்தியாவுக்கு புறப்பட்ட அமெரிக்கா அதிபர் டிரம்ப்..! 

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.

By Fahad | Published: Apr 02 2020 06:57 PM

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.
  • இந்நிலையில், வாஷிங்டனிலிருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நாளை அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார். ட்ரம்புடன் அவரின் குடும்பத்தினரும் வருகின்றனர். இந்தியாவுக்கு முதல் முதலாக வரும் டிரம்ப், நாளை, நாளை மறுநாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் பலத்த பாதுகாபுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப், தற்பொழுது வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். நாளை பகல் 12.30 மணிக்கு அஹமதாபாத் வரும் இவரை பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.