அமெரிக்கா: வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு!! 19 பேர் பலி!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம்

By Fahad | Published: Mar 28 2020 05:09 PM

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், 19பேர் உயிரிழந்தனர். மேலும், 22பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்களை நோக்கி சுட்டார்கள். இதுகுறித்து அந்நாட்டு காவல் துறையினர் சந்தேகத்திற்குறிய ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்குஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்டனம் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இத்துப்பாக்கி சூட்டை அடுத்து, எல் பாசோ நகர் காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது.