டென்னிஸ் மைதானத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றியது அமெரிக்கா.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா, நாளுக்கு நாள் இங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பில்லி ஜேன் கிங் தேசிய டென்னிஸ் மைதானத்தை கொரோனா மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 

நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ எஸ் ஓபன் எனப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 17,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானம், உலக பிரபலமானதாகும். இந்த நிலையில் மையத்தின் ஒரு பகுதி 350 படுக்கைகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நியூயார்க்கில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நியூயார்க்கின் மத்திய பூங்காவில் 68 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையின் கட்டுமானமும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்