கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ரஷ்யாவிடம் இருந்து உபகரணங்கள் வாங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க!

கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை  ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு நாடுகளும் கஷ்டமான சூழ்நிலையிகளில் ஒருவொருக்கொருவர் உதவி செய்த்துள்ளன. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறினார்.