காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!பிரபல நடிகை எடுத்த முடிவு

பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பிரபல

By Fahad | Published: Mar 28 2020 06:14 PM

பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை  ஊர்மிளா மடோன்கர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இவர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.இதனைஅடுத்து அவர் காங்கிரஸ் சார்பில் வடக்கு மும்பை பகுதியில் போட்டியிட்டார்.ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை,தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில்  ஊர்மிளா மடோன்கர் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.கட்சியின் முன்னேற்றத்திற்காக யாரும் பணியாற்ற முன்வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் ஊர்மிளா.

More News From Urmila Matondkar