ஆப்கான் போர் விவகாரம்: அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட தாலிபான்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போருக்கு தீர்வு காண நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தற்போது கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த தலிபான்களின் ஆட்சியை அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மொத்த நாட்டின் எல்லையில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும் ஒரு பங்கு தலிபான்களின் வசமும் தற்போது உள்ளன.

இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, சமீபத்தில் ஒர் அரசியல் திட்டத்தை வெளியிட்டிருந்தார். ஆயுதங்களை கைவிட்டால், தாலிபான் தீவிரவாத அமைப்பை, அரசியல் கட்சியாக ஏற்க தயார் என அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு தாலிபான்கள் தரப்பு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதனால் பேச்சுவார்த்தைகள் தடைபட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்காவில்ம் உள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் காரல் ஜன் கஸ்டப் வான் ஓஸ்டோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தலிபான் அமைப்பினர் விருப்பம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் அந்த அமைப்பு நிபந்தனையற்ற வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே ஆப்கனில் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment