நடப்பு ஆண்டில் தான் புவி வெப்பமயமாதல் அதிகம் ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு..!

  • நடப்பு ஆண்டில் தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகம்.
  • புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் நீரின் மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் உயர்வு.
  • 70 லட்சம் பேர் மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினால் நேரடியாக பாதிப்பு.

உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன் இது தான் விளைவிற்கு அடிப்படையாகும்.

வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் தான் புவி வெப்பமயமாதல் அடைகிறது. வெளிபுறத்தில் எரிக்கப்படும் குப்பையிலிருந்து வெளியேற்றப்படும் வாயுக்கள் மற்றும் வாகனம், தொழிற்சாலையில் வெளியேற்றப்படும் புகைகள் மேலும் எரிமலை வெடித்தல் போன்றவையாகும்.

ஐக்கிய நாடுகளின் சபையில் நடப்பு ஆண்டில் தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகம் என தெரிவிக்கபட்டது. உலக வானிலை மையம் நடத்திய புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆய்வு முடிவுகளின் படி, புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் நீரின் மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் ஒரு கோடி பேர் வசிப்பிடங்களை விட்டு இடம் மாறியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 70 லட்சம் பேர் மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இயற்கை பேரிடர்களால் வசிப்பிடங்களை விட்டு இடம் மாற்றம் செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சமாக உயரக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்