#Under19WorldCup: கோப்பையை தட்டி தூக்கியது வங்கதேசம்.! போராடி தோற்றது இந்தியா.!

  • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் இறுதி போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில்  நடைபெற்று  வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா களமிறங்கினார்கள். திவ்யான்ஷ் தொடக்கத்திலேயே 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜெய்ஸ்வாளுடன்  திலக் வர்மா ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது. இந்த சமயத்தில் திலக் வர்மா 38 ரன்களில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் ஜெய்ஸ்வால் நிதனமாக விளையாடி 4-வது அரை சதத்தை பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து ஜெய்ஸ்வால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இறுதியில் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே அடித்தது. வங்கதேச அணியின் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான பர்வேஸ் ஹொசைன் எமோன், தான்சிட் ஹசன் களமிறங்கினர். பின்னர் தான்சிட் ஹசன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் எமோன், இவருடன் சேர்ந்து கேப்டன் அக்பர் அலி அதிரடியாக விளையாடி, எமோன் 47 ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து 41 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற பிறகு 46 ஓவர்களாக  (DSL method) குறைக்கப்பட்டு 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்திய அணி பந்துவீச்சி சார்பாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்