ஐ.நாவின் 75ஆவது ஆண்டு கூட்டம்... இந்திய பிரதமர் சிறப்புரை...

ஐ.நாவின் 75ஆவது ஆண்டு கூட்டம்... இந்திய பிரதமர் சிறப்புரை...

  • UN |
  • Edited by kaliraj |
  • 2020-09-20 07:19:00
ஐக்கிய நாடுகள்  பொதுசபையின் வருடாந்திர கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டு ஐ.நா.வின் 75-வது ஆண்டு என்பதால் அதன் நினைவாக நாளை உயர்மட்ட கூட்டம் நடக்கிறது. அதில் ‘நாம் விரும்பும் எதிர்காலம், நமக்கு தேவையான ஐ.நா.: பன்முகத்தன்மைக்கான நமது கூட்டு உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகளும் ஒரு தொலைநோக்கு அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொள்கின்றன. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந்தேதி வரை பொது சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி வரும்  26-ந்தேதி சிறப்புரை நிகழ்த்துகிறார். கொரோனா பரவல் காரணமாக ஐ.நா.வின் பொதுசபை கூட்டம், அதையொட்டிய அமர்வுகள், மாநாடுகள் அனைத்தும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. அதிலும்  குறிப்பாக நாடுகளின் தலைவர்கள் யாரும் இதில் நேரடியாக பங்கேற்கவில்லை. மாறாக அவர்களது உரைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, பொது சபை அரங்கில் ஒளிபரப்பப்படுகிறது. அந்தவகையில் பிரதமர் மோடியின் இரண்டு  உரைகளும் வீடியோ முறையில் அங்கு ஒளிபரப்பப்படுகிறது. இந்த ஆண்டு பிரதமர் மோடியின் உரைகள் இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறியுள்ளார்.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!