அமமுக சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சி ! எந்தநேரமும் செய்தி வெளியாகலாம் - தினகரன் அறிக்கை

அமமுக கட்சி சட்டப்படி பதிவு செய்யப்பட்ட செய்தி

By venu | Published: Dec 04, 2019 08:45 AM

அமமுக கட்சி சட்டப்படி பதிவு செய்யப்பட்ட செய்தி எந்தநேரமும் வெளியாக இருக்கிறது என்று  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு நாள் நாளை கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,அம்மா அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாள் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை அருகே திரளுவோம் .. மேலும் அமமுக கட்சியாக பதிவு பெற்றதாக எந்த நேரமும் செய்தி வெளியாகலாம்.அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுத்து புதிய ஆட்சி அமைத்திட சபதமேற்போம். உண்மையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் பழனிச்சாமி அரசுக்கு அறவே இல்லை. மாநிலம் தழுவிய தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துவிட்டதாக தெரிகிறது என அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc