தமிழகத்தில் 2 அல்லது 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பாடும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தமிழகத்தில் இனி வரும் 2 அல்லது 6 மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக

By Fahad | Published: Apr 02 2020 08:48 AM

தமிழகத்தில் இனி வரும் 2 அல்லது 6 மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியா முழுவதும் வெற்றி பெற முடிந்த மோடி அவர்களால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்று கூறினார். இங்கு மக்கள் அவர்களை விரட்டி விரட்டி அடித்துள்ளனர். அதே போல் வேலூர் தொகுதியில் நடக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். மேலும், இங்கு திமுக வின் வெற்றி 100 % நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசாங்கம் 2 அல்லது 6 மாநிலங்களில் கவிழ்ந்து ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் உதயநிதி கூறி இருக்கிறார்.

More News From narenthira modi