இரு சக்கர வாகனம் ஓட்டும் நண்பர்களே உஷாராக இருங்கள் – அபராத கட்டணம் உயர்கிறது!

மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகன ஆய்வு சட்டத்தின் படி வாகனங்களுக்கான அபராத கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

இதுவரை வாகன உரிமம் இருந்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் காவல்துறை சோதனை செய்யும் போது சிக்கி 100 ரூபாய் வசூலிப்பது வழக்கம். ஆனால், இனிமேல் புதிய சட்டத்தின் படி அபராத கட்டணம் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்தியாவில், 90 சதவீதம் விபத்துகள் இருசக்கர வாகனத்தால் மட்டுமே ஏற்படுகிறது இதனால், உயிரிழப்பும் அதிகரிக்கிறது எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய மோட்டார் வாகன சட்டமானது விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.