முதலைக்கு பீர் ஊற்றிக்கொடுத்த அமெரிக்காவை சேர்ந்த இரு புல்லைங்கோ

அமெரிக்காவில்  குட்டி முதலைக்கு பீர் குடிக்க வைத்த இளைஞர்கள் . அமெரிக்காவில்

By Dinasuvadu desk | Published: Oct 15, 2019 05:39 PM

அமெரிக்காவில்  குட்டி முதலைக்கு பீர் குடிக்க வைத்த இளைஞர்கள் . அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள திமோதி மற்றும் நோவா ஆஸ்போர்ன்  இளைஞர்கள் இருவர் தங்களது பொழுதுபோக்கை கழிக்க சென்ற இடத்தில சும்மா இருக்காமல் தங்களது சேட்டையை குட்டி முதலையிடம் காட்ட அது  கையை கடித்துள்ளது . இதனால் கோபமடைந்த திமோதி என்ற 27 வயதுமிக்க இளைஞர் தான் குடித்து மீதம் வைத்திருந்த பீரை அந்த முதலையின் வாயில் ஊற்றியுள்ளார் இதனை அவருடன் இருந்த 22 வயதுமிக்க நோவா ஆஸ்போர்ன் என்ற இளைஞர்  தனது கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார் இந்த வீடியோ  சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிகழ்வானது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது.இதைக்கண்ட புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் கடும் கோபமடைந்து அவர்களின் மீது வழக்கு தொடர்ந்தது இதனிடையே விசாரணைக்கு ஆஜரான இருவரும் தங்களது தவறை ஒப்புக்கொண்டு தாங்கள் அதை விடும் பொது அது உயிரோடுதான் இருந்ததாகவும் தனது கையை கடித்ததால் கோபத்தில் இவ்வாறு செய்ததாக கூறினார். இதனிடையே அந்த இருவரிடம் அதிகாரிகள் இனி இதுபோன்று தவறைகள் செய்யமாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு விடிவித்ததாக தகவல் கூறுகிறது .இதோ அந்த வீடியோ
Step2: Place in ads Display sections

unicc