பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொள்ள போகும் இரண்டு பிரபல நடிகைகள்….!!!

  • பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொள்ள போகும் இரண்டு பிரபல நடிகைகள்.

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 2 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன்-3 நடத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் நடிகர் கமலஹாசன்.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முதல் முதலாக நடிகை கஸ்தூரி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அடுத்ததாக, மைனா படத்தில் வில்லியாக நடித்த நடிகை சூசன் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.