அமெரிக்க  டொனால்ட் டிரம்ப்  ரீ -ட்வீட்  செய்ததை நீக்கிய ட்விட்டர்

அமெரிக்க  டொனால்ட் டிரம்ப்  ரீ -ட்வீட்  செய்ததை நீக்கிய ட்விட்டர்

  • tweet |
  • Edited by venu |
  • 2020-07-20 08:00:23

அமெரிக்க  டொனால்ட் டிரம்ப்  ரீ -ட்வீட்  செய்ததை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவி வரும் சூழலிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில்  அமெரிக்க  டொனால்ட் டிரம்ப்  ரீ -ட்வீட்  செய்ததை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.லிங்கின் பார்க் குழுவின் இசையை உள்ளடக்கிய வீடியோவை டிரம்ப் பதிவிட்டுள்ளார் .மேலும் "பதிப்புரிமை உரிமையாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ரீ -ட்வீட் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லிங்கின் பார்க் குழு அளித்துள்ள விளக்கத்தில்,லிங்கின் பார்க் டிரம்பிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை, ஆதரிக்கவில்லை. எங்கள் இசையில் எதையும் பயன்படுத்த அவரது அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

Latest Posts

போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!