எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள்.! அனைத்திற்கும் பொறுப்பு நான்தான்.! டிவிட்டர் சிஇஓ தகவல்.!

டிவிட்டர் நிறுவன செயல்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பானவர் நான்தான்.  எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள். – டிவிட்டர் சி.இ.ஓ அதிகாரி தகவல்.

அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தபால் ஒட்டுகளுக்கான விண்ணப்பங்களைய அனுப்பும் பணியில்  கலிபோர்னியா மாகாண ஆளுநர் தொடங்கினார். இந்த தபால் வாக்குசீட்டுகள் மூலம் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார். 

இதனை மறுத்து ட்ரம்பின் பதிவு பொய்யானது என ஆதாரத்துடன் செய்தியாக அமெரிக்க பத்திரிக்கை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. பத்திரிக்கை செய்தியை மேற்கோள் காட்டி, ட்ரம்பின் டிவீட்கள் பொய்யானது என டிவிட்டர் பதிவிட்டிருந்தது.  

இதனை குறித்து, ட்ரம்ப் கூறுகையில், அமெரிக்க அரசியல் விவகாரத்தில் டிவிட்டர் தலையிட கூடாது. அதனை நாங்கள் ஏற்க முடியாது இதற்கான நடவடிக்கை பெரிதாக இருக்கும் என கூறினார். 

இதற்கு பதிலளித்த டிவிட்டர் சி.இ.ஓ , டிவிட்டர் நிறுவன செயல்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பானவர் நான்தான்.  எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள். உலகெங்கும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவோம். எங்கள் தவறுகளை நாங்கள் ஒப்புக்கொள்வோம். என கூறியுள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.