இந்தோனேசியாவில் இரண்டுமுறை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடும் அச்சத்தில் மக்கள் !

இந்தோனேசியாவில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் முதலில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாவா தீவில்  முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிலநடுக்கம் ரிக்ட்ருக்கு 5.6 ஆக பதிவானது.

அடுத்த சில நிமிடங்களில் பாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்ட்ருக்கு 6.1 ஆக பதிவானது.

மேலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எரிமலைகள் இருப்பதால் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.