மாணவர்களுக்கு தனிச் சேனல் !ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் ஒளிபரப்பு

பள்ளி மாணவர்களுக்கான  தனி சேனலின் ஒளிபரப்பு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடக்கப்படும்

By venu | Published: Aug 19, 2019 05:03 PM

பள்ளி மாணவர்களுக்கான  தனி சேனலின் ஒளிபரப்பு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு தனிச் சேனல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் மாணவர்களுக்கான தனி சேனலின் ஒளிபரப்பு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சேனலுக்கு கல்வி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் கல்வி சேனலுக்கு ஒரு கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc