சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்தியா! பதக்கங்களை குவித்த தூத்துக்குடி சிலம்பம் வீரர்கள்!

மலேசியாவில் இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 6 தேதி வரை சிலம்பம் போட்டி நடைபெற்றது.

By manikandan | Published: Oct 10, 2019 12:58 PM

மலேசியாவில் இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 6 தேதி வரை சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 9 நாடுகள் கலந்துகொண்டன. இதில் தூத்துக்குடி மாவட்டம் ரஜோ விளையாட்டு கழக சிலம்பம் சுற்றும் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சுஷ்மா எனும் மாணவி கம்பு சண்டை போட்டியில், வெள்ளிப்பதக்கமும், தனித்திறமை போட்டியில் வேல்கம்பு எரிந்து வெள்ளி பதக்கமும், பெற்றார். லோகேஸ்வரி எனும் மாணவி கம்பு சுற்றும் போட்டியில் நான்காம் இடம் பெற்றார். தனி திறமை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அடுத்ததாக ஸ்வேதா எனும் மாணவி கம்பு சுற்றும் போட்டியில் வெள்ளி பதக்கமும், தனி திறமை போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். ரஜோ விளையாட்டு கழக சிலம்பாட்ட தலைவர் ராஜேஷ் பாலன் என்பவர் மலேஷிய வீரரை கம்பு சுற்றும் போட்டியில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். இறுதியில் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா தன்வசமாகியது.
Step2: Place in ads Display sections

unicc