ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து! பள்ளி கல்வித்துறை அரசாணை

ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவிதித்துள்ளது.

சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று  தெரிவித்தார்.

இதனையடுத்து  ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து என்று அரசாணை வெளியிட்டுள்ளது  தமிழக பள்ளி கல்வித்துறை.இந்த அரசாணை காரணமாக 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில கல்விக்கான கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.