என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் ?முதலமைச்சர் விளக்கம்

என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் ?முதலமைச்சர் விளக்கம்

  • தமிழகத்தில் என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பீகார் மாநிலத்தில் என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், பீகார் மாநிலத்தை போல தமிழகத்திலும் என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி முக்கொம்பு அணை இடிந்து விழுந்தது. இதனால் புதிய அணை கட்டுவதற்காக ரூ.387.6 கோடி ஒதுக்கிடப்பட்டது. அதன்படி கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அணை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை நேரில் பார்வையிட சென்ற முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பாஜக கூட்டணியில் உள்ள ஜனதா தளம் கட்சி தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல், தமிழகத்திலும் நிறைவேற்றப்படுமா என கேள்வியெழுப்பினர். அதற்கு தமிழகத்தில் என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube