புதிய வழியில் இறங்கிய டிடிவி தினகரன்?காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உண்ணாவிரதம்?

புதிய வழியில் இறங்கிய டிடிவி தினகரன்?காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உண்ணாவிரதம்?

மார்ச் 25-ம் தேதி தஞ்சையில் டிடிவி தினகரன்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதுடன், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுவே இறுதித் தீர்ப்பு என்றும் இதனை எதிர்த்து எந்த மேல்முறையீடும் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி.,க்கள் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மார்ச் 25-ம் தேதி தஞ்சையில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய பின் தினகரன் அறிவித்துள்ள முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *