3-வது திருமணம் செய்ய முயற்சி....! கணவரை நடு ரோட்டில் அடித்து உதைத்த மனைவிகள்..!

கோவையில் மாவட்டம்  சூலுரை உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அரவிந்த் இவர் ராசிப்பாளையத்தில் 

By murugan | Published: Sep 11, 2019 09:01 AM

கோவையில் மாவட்டம்  சூலுரை உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அரவிந்த் இவர் ராசிப்பாளையத்தில்  உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு திருப்பூர் கணபதிபாளையம் சார்ந்த பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த இரண்டு வாரத்திலேயே  கணவரும் , அவரது பெற்றோரும் கொடுமைப் படுத்தியதாக பிரியதர்ஷினி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அரவிந்த் கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சார்ந்த அனுப்பிரியா என்பவரை பிரியதர்ஷனிக்கு  தெரியாமல்  கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பிரியாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அரவிந்தும், அவரது தந்தையும் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக கூறி அனுப்பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அரவிந்த் மூன்றாவது திருமணம் செய்வதற்காக சமூக வலைதளங்களில் பெண் தேடி வந்துள்ளார். இதை அறிந்த பிரியதர்ஷினி , அனுப்பிரியா இருவரும் அரவிந்த் வீட்டிற்கு சென்று விளக்கம் கேட்டனர். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்காததால் அரவிந்தின் இரண்டு மனைவிகளும் அரவிந்த் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு சென்று உள்ளனர். அங்கு சென்ற இரண்டு மனைவிகளும் சரமாரியாக நடுரோட்டில் வைத்து அரவிந்தை  தாக்கினர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்களை ஏமாற்றி அதுமட்டுமல்லாமல் மூன்றாவது திருமணம் செய்ய அரவிந்த் முயற்சி செய்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என இரண்டு மனைவிகளும்  புகார் அளித்தனர். அவரின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அரவிந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc