உலக தலைவர் மத்தியில் உலக சாதனை படைத்த ட்ரம்ப்! 2 மணி நேரத்தில் 123!

  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக செல்லப்படுபவர். 
  • இவர் 2 மணிநேரத்தில் சுமார் 123 ட்வீட்கள் போட்டு சாதனை படைத்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது கருத்துக்களை டிவிட்டரிலோ, பொது வெளியிலோ பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவிடுகிறார்.

இவர் தற்போது டிவிட்டரில் ஒரு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் அதாவது, 2 மணிநேரத்தில் 123 டிவீட்களை பதிவிட்டுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் 2 மணிநேரத்தில் இவ்வளவு ட்வீட் பதிவிட்டிருப்பது இதுவே முதல் முறை.

அவன் அந்த டிவீட்களில். அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியானது நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது குறித்தும், ஊடகங்கள் தனக்கெதிராக செயல்படுகிறதாகவும், குற்றம் சாட்டினார். இது குறித்து தான் 123 டிவீட்கள் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.