அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் சந்திப்பு

“Howdy Modi" நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

By venu | Published: Sep 17, 2019 02:15 PM

“Howdy Modi" நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கிறார். ஐ.நா.பொதுசபையின் கூட்டம் வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது .இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து  22-ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள ஹோஸ்டனில்(Houston)  அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள “Howdy Modi" நிகழ்ச்சியில்  உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. இந்த  கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகிவந்தது. இந்த நிலையில் இது குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இந்திய பிரதமர்  மோடியுடன் “Howdy Modi" நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார்.இது இரு நாட்டு உறவுவை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc