சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!

சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!

சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு ஆயுத விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு நீடிக்கும் மத்தியில் 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உட்பட மூன்று ஆயுத அமைப்புகளை கொண்ட  ஆயுதங்களை தைவானுக்கு விற்க ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த புதன்கிழமை அறிவித்தது.

மேலும், 135 துல்லியமான நில-தாக்குதல் ஏவுகணைகள், அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் தைவானுக்கு அதன் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி அளிக்க ஒப்புதல் அளித்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

“இந்த ஆயுத விற்பனை அமெரிக்கா, நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில், நம் நாட்டிற்கு உதவுகிறது என்பதை காட்டுகிறது” என்று தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube