அமெரிக்க அதிபர் டிரம்ப் பெண்டகனுக்கு  உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்புக்கு திட்டமிடுமாறு ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டு வளைகுடா போர் முடிவுக்கு வந்த போது வாஷிங்டன் DC-யில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதன்பின்னர் தற்போது வரை அமெரிக்காவில் ராணுவ அணிவகுப்புகள் நடைபெறவில்லை. ஆனால் தற்போது ராணுவ அணிவகுப்பை நடத்த முடிவு செய்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இதுதொடர்பாக திட்டமிடுமாறு பெண்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக அணிவகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் ராணுவ பலத்தை காட்டுவதற்காகவே இந்த அணிவகுப்பை நடத்த டிரம்ப் முடிவு செய்திருப்பதாக உலக நாடுகள் கருதுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment