‘ட்ரூ காலர்’ ஆப் இந்தியாவில் செய்துள்ள புதுவித சாதனை என்ன தெரியுமா?

எவ்வளவோ தொழிற்நுட்பங்கள் வந்தாலும், அதற்கு ஈடாகவே சில மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் எல்லா வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அதில் பலவித ஹேக்கிங் சார்ந்த விஷயங்கள் நம்மை மீறி நடந்து வருகின்றன. இது போன்ற நிலையை தவிர்க்கவே “ட்ரூ காலர்” உள்ளது.

இதனை பயன்படுத்துவோரின் மொபைலில் ஏதேனும் தவறான அல்லது ஆள் தெரியாத எண்கள் வந்தால் இதில் காட்டி கொடுத்து விடும். இது மக்களும் மிகவும் உதவுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு சாதனையை ட்ரூ காலர் நிறுவனம் செய்துள்ளது என வெளியிட்டுள்ளது. அது என்ன சாதனை என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.


மில்லயன் வாடிக்கையாளர்கள்
ட்ரூ காலரை பயன்படுத்தும் இந்திய வாடிக்கையாளரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதே அந்த சாதனை. அதாவது, இதில் 5 லட்சம் பேர் பிரீயம் வாடிக்கையாளராகவும், கிட்டத்தட்ட 130 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த செயலியை தினசரி பயன்படுத்தி வருவதாகவும் ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


பலவித திட்டங்கள்
இந்தியாவில் இதன் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பலவித சேவைகளை மக்களுக்கு வழங்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆரம்ப நிலையில் வெறும் ‘காலர் ஐடி’ வசதியுடன் மட்டுமே இது வெளியானது. அதன் பின் ‘ஸ்பாம் காலர்கள்’ ‘பிளாக்டு காலர்கள்’ போன்ற பல்வேறு அப்டேட்கள் ட்ரூ காலர் செயலியில் இடம் பெற்றது. இதை போலவே மேலும் பல வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்த செயலி மெருகேற்றப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment