மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல்…!ஆளுநரை சந்தித்த பின் முதல்வர் ராஜினாமா ..!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல்…!ஆளுநரை சந்தித்த பின் முதல்வர் ராஜினாமா ..!

மகாராஷ்டிரா தேதேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்களுக்கு மேலாகியும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.மகாராஷ்டிரா சட்டப்பேரவை ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்து தனது ராஜினாமா கடித்ததை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரிடம் கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில்  நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் , சிவசேனா கட்சி 56 இடங்களிலும் ,மற்றும் தேசியவாத கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
கூட்டணிக்கட்சிகளான சிவசேனா மற்றும் பாஜக இடையே ஆட்சி பங்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Join our channel google news Youtube