ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் – தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்

ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் – தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்

ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு. 

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழானது, 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதி உள்ளது. தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள விதியின்படி, TET தேர்வில், இனி ஒருமுறை தேர்ச்சி பெற்றால், அது ஆயுள் முழுவதும் செல்லும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube