இந்தியாவுடன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை ஆனால் முதலிடம் -பின்னுக்குத் தள்ளப்பட்ட பும்ரா

பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா முதலிடத்தை

By Fahad | Published: Mar 29 2020 06:45 AM

பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா முதலிடத்தை இழந்துள்ளார்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.ஆனால் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா ஒரு தொடரில் சொதப்பிவிட்டார்.3 போட்டிகளில் பூம்ரா ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.இது இந்திய அணிக்கு பெரும் பலவீனமாக இருந்தது. இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா தரவரிசையில் 719 புள்ளிகளை மட்டும் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்தியாவுடன் தொடர் முழுவதும் பங்கேற்காத ட்ரென்ட் போல்ட் 727 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.