சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகும் "ஸ்டாப் ஹைட்ரோ கார்பன்" ஹேஸ்டேக்!

டெல்டா மாவட்டங்களில் நடக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விளை நிலங்களை பாதுகாக்கக்கோரி சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் டிவீட்டரில் “ஸ்டாப் ஹைட்ரோ கார்பன்” என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நாகை , கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் நடக்கும் பல ஏக்கர் விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடிய நிலையில், போராடிய 430 விவசாயிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.