#TrashtagChallenge: பிளாஸ்டிக் குறித்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் சேலஞ்ச்

சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொண்டால் அதை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.

அதிலும் குறிப்பாக பேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம்  உள்ளிட்ட  இணையதளங்களின் பயனாளர்கள் அதிகம்.அதிலும் ட்விட்டரை எடுத்துக்கொண்டால் அதிகமாக ஒரு  ஹேஷ்டேக்கை பயன்படுத்தினால் அது சிறிது நேரத்திலே  ட்ரெண்டாகிவிடும்.

இந்நிலையில் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும்  பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பலவகையில் முயற்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது  சமுக வலைத்தளங்களில் #TrashtagChallenge என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்து வருகின்றது . இதன்படி குப்பைகளால் அசுத்தம் அடைந்திருக்கும் பகுதியினையும் சுத்தம் செய்த பிறகான தூய்மையான பகுதியையும் புகைப்படம் எடுத்து பகிர்வது தான் இதன் முக்கியம் நோக்கம் ஆகும்.எனவே நாம் அனைவரும் இதன் மூலம்   பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

அதேபோல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிடுவோம்

Leave a Comment