ஸ்விக்கி நிறுவனத்தில் முதன்மை திட்ட மேலாளராக தமிழக திருநங்கை !

தற்போது புகழ்ப்பெற்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஸ்விக்கி ஒன்றாக திகழ்கிறது.இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டு உள்ளது.இந்நிலையில் தற்போது  திருநங்கை ஒருவரை ஸ்விக்கி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பான முதன்மை திட்ட மேலாளராக நியமித்து உள்ளது.

தமிழகத்தில் பிறந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொழில்நுட்பம் , பேஷன் சார்ந்த பணிகளை செய்துவந்த திருநங்கை சம்யுக்தா விஜயனை முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Image result for திருநங்கை சம்யுக்தா

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வேலை பார்த்து வந்த திருநங்கை சம்யுக்தா விஜயன் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா வந்தார்.பின்னர் அமேசான் நிறுவனத்தில் பணி செய்து வந்தார் .பிறகு சொந்தமாக பேஷன் தொடர்பான ஸ்டார்டப் நிறுவனத்தை நிர்வகித்தார்.இந்நிலையில் தற்போது ஸ்விக்கி முதன்மை திட்ட மேலாளராக பணியில் சேர்ந்து உள்ளார்.

 

author avatar
murugan