பள்ளிக்கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் இடமாற்றம்- பள்ளிக்கல்வித்துறை அதிரடி

பள்ளிக்கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் இடமாற்றம்- பள்ளிக்கல்வித்துறை அதிரடி

பள்ளிக்கல்வித்துறையில் 3 இயக்குநர்களை இடமாற்றம் செய்து தமிழக   பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ப்ரதீப் யாதவ்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி ,தமிழக  பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ப்ரதீப் யாதவ் பிறப்பித்த உத்தரவில்,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாக ரீதியான பணியிடமாற்றம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube