ஜூன் 30 வரை ரயில் சேவைகள் ரத்து .! ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பா..?

ஜூன் 30 வரை ரயில் சேவைகள் ரத்து .! ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பா..?

ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது என மத்திய ரயில்வே அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 17-ம் தேதியுடன் முடிய இருந்த நிலையில, பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்திற்கு மே 31-வரை விமான சேவையும், ரயில் சேவையும் தொடங்க வேண்டாம் என்று  தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று மத்திய ரயில்வே அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியது. அதில், பயணிகள் ரயில்களின் இயக்கம் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக  தெரிவித்தது. இந்நிலையில், பிரதமர் மோடி, 5-வது முறையாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது,  4-ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என தெரிவித்தார். 

இதைதொடர்ந்து, தற்போது மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது என  தெரிவித்துள்ளது. மேலும், வெளி மாநில தொழிலாளர்களுக்காக தற்போது இயக்கப்பட்டு வரும்” Sharmik  சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள்” தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஊரடங்கு ஜூலை வரை நீட்டிக்கப்படுமா..? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube